லவ் டுடே பட பாணியில் செல்போன் மாற்றிய இளைஞனின் திருமணம் நின்று விட்டதாம்: அப்பட்டமாக திரைக்கு வந்த ரகசியங்கள்!
லவ் டுடே திரைப்படத்தைப் போலவே செல்போனை மாற்றிக் கொண்ட காதலர்களின் திருமணம் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லவ் டுடே திரைப்படம்
அண்மையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் தற்போது இளைஞர்களிடையே பெரும் கலக்கி கலக்கி இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் சில காதலர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையிலும் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.
இத்திரைப்படத்தில் திருமணம் செய்யவிருக்கும் காதலனும் காதலியும் தங்கள் செல்போனை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வார்கள்.
அதில் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் என கதைக்களம் நகரும் என எதிர்பார்த்தால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் செய்து வந்த தவறுகள் செல்போனை மாற்றிக்கொண்டதால் இருவருக்கும் தெரியவருகின்றது.
உருமாறிய லவ்டுடே திரைப்படம்
இத்திரைப்படத்தை மையமாக வைத்து சேலத்தில் மாறுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அரவிந்த் என்பவர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி இருக்கிறார். இவர் அதே வைத்தியசாலையில் செவிலியராக பணியாற்றும் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நிச்சயிக்கப்பட்ட பின்னர் இவர்கள் இருவரும் லவ்டுடே திரைப்படம் போல ஒருவருக்கொருவர் தங்களது செல்போனை மாற்றிக்கொண்டார்கள். இவ்வாறு இருக்கையில் காதலி காதலனின் செல்போனை பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காதலனின் காதல் வலை
காதலனின் செல்போனில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியொருவருடன் காதல் பேச்சு பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல ஆசை வார்த்தைகளைக் கூறி வீடியோ காலில் மாணவியை அரை நிர்வாணமாக இருக்கச் செய்து தனது போனில் பதிவு செய்திருக்கிறார்.
இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த காதலி இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்து மகளீர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
கொடுக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அரவிந்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இச்சம்பவத்தால் உஷாரான காதலி தனது திருமணத்தை நிறுத்திவிடக் கோரி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார் பெற்றோரும் இவரின் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இன்றைய சினிமா தற்போது பலரின் வாழ்க்கையை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால் இத்திரைப்படம் இரண்டு பெண்களின் வாழ்க்கையை காப்பாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.