விவாகரத்திற்குப் பின் இன்னொரு பெண்ணுடன் ஊர் சுற்றும் நாகசைதன்யா: டேட்டிங் குறித்து காட்டமாக பேசிய சமந்தா
சமந்தாவும் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்துக் கொண்டதன் பின்பு நாகசைதன்யா வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்வது பற்றி சமந்தா மிகவும் காட்டமாக பதிலளித்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு மீட்டுவந்திருக்கிறார்.
இவர் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். எதிர்வரும் 14ஆம் திகதி சமந்தாவின் சகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஊர் சுற்றும் நாகசைதன்யா
இந்நிலையில், சமந்தாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்னர் வேறொரு நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இது குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, “எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும்.
குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என கொஞ்சம் ஆவேசமாக பதிலளித்திருக்கிறார்.
I never said this!! https://t.co/z3k2sTDqu7
— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023