ரஜினி கூறிய ஒற்றை வார்த்தை! விவாகரத்து முடிவை கைவிட்ட தனுஷ்: நடந்தது என்ன?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ரஜினிகாந்த் கூறிய ஒரு வார்த்தையினால், விவாகரத்து முடிவை மாற்றி இருவரும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், நடிகர் தனுஷும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரியப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தனர்.
தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து அவரவர் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி வந்தனர். பிள்ளைகள் இருவரிடமும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை குறித்து பலரும் சமாதானம் செய்தும் தோல்வியே ஏற்பட்டதாகவும், இருவரும் பிரியப்போவதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது தனுஷும் ஐஸ்வர்யாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
சமரசம் செய்த ரஜினிகாந்த்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது நடிகர் ரஜினிகாந்த், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என அறிவுறுத்தியதாகவும், அவரின் பேச்சைக் கேட்டு மனம்மாறிய தனுஷ், ஐஸ்வர்யா உடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சமரச பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டுள்ளதாகவும், இரு வீட்டாரும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.