பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் நாக சைதன்யா - மீண்டும் வெளியான புகைப்படம் வைரல்!
பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கும் நாக சைதன்யாவின் புகைப்படம் மீண்டும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.
இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
வீடு வாங்கிய நாகசைதன்யா
தற்போது ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் ரூ. 15 கோடிக்கு புது வீடு வாங்கி குடியேறியிருக்கிறாராம் நாக சைதன்யா. அதுவும் சமந்தா வசிக்கும் பகுதியிலேயே நாக சைதன்யா வீடு வாங்கி குடியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையுடன் நாகசைதன்யா டேட்டிங்
இந்நிலையில், சமந்தாவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் நடிகர் நாகசைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னின் செல்வன்’ படத்தில் வானதி வேடத்தில் நடித்தவர் நடிகை ஷோபிதா. இவர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் லண்டனுக்கு ஜோடியாக சேர்ந்து சென்றனர்.
அங்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டது. இதன் பிறகு இந்தப் பிரச்சினை சற்று ஓய்ந்தது.
வைரலாகும் புகைப்படம்
தற்போது சமூகவலைத்தளங்களில் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில், இருவரும் ஜோடியாக லண்டனில் ஊர் சுற்றி வந்தது உறுதியாகியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஷோபிதாவுடன் உணவருந்தச் சென்றுள்ளார் நாகசைதன்யா.
அங்கு இருந்த சமையல் கலைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் போட்டோவை பதிவிட்டபோது அலட்சியமாக இருந்த நெட்டிசன்கள் தற்போது அதை வைரலாக்கி வருகின்றனர்.
#CoupleAlert: A social media post has revealed a snapshot of #NagaChaitanya and #SobhitaDhulipala sharing a dinner date at a restaurant in London.
— Bangalore Times (@BangaloreTimes1) March 30, 2023
Read today in #BangaloreTimes pic.twitter.com/UgrqQDUhWB
First pic : on the day of they both are announced their divorce
— Innocent King (@Innocent_King1) March 28, 2023
Second pic : now clearly shows, that girl is shobita.
Cheapest person @chay_akkineni
Cheating a girl who's love you unconditionally. Even she put your signature tatto in body.#NagaChaitanya #SamanthaRuthPrabhu pic.twitter.com/2ZhQ45sje5