ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சொத்து மதிப்பா? ஒரு படத்திற்கு மட்டும் அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தற்போது பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறாரா என வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற சினிமாக்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
மேலும், தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அண்மையில் கூட தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் இருப்பவர். மேலும் இவருக்கு எதிராக அதிக மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இவ்வளவு சொத்து மதிப்பா?
ராஷ்மிகாவின் இந்த ஆண்டின் நிலவரப்படி அவரின் சொத்து மதிப்பானது 65 கோடிகள் ஆகும். இவரின் ஒரு மாத சம்பளம் 60 இலட்சத்திற்கு அதிகமாகும்.ஆண்டு வருமானம் 8 கோடியாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் தனது ஒரு படத்திற்கு மட்டும் 4 கோடி ரூபா வாங்குவாராம். இவர் திரைப்படங்கள், விளம்பரப்படங்கள், மோடலிங் போன்ற துறைகளில் கலந்துக் கொண்டு தான் அவர் 4 கோடி ரூபாவை சேர்த்திருக்கிறாராம்.
மேலும், இவர் ரியல் எஸ்டேட்டில்களில் அதிக ஆசை உள்ளதால் இவர் சில நாடுகளில் ஆடம்பரமாக சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்.
அதில் தான் பெங்களுரில் 8 கோடி மதிப்பிலான பெரிய மாளிகையையும் வாங்கி வைத்திருக்கிறார். மேலும், நடிகை ராஷ்மிகா அதிக கார் பிரியர் என்பதால் 5 இலட்சம் மதிப்புள்ள ஒரு காரையும், 50 இலட்சம் மதிப்புள்ள இன்னொரு காரும் வைத்திருக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் டொயோட்டா இனோவா, ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களையும் சொத்தமாக வைத்திருக்கிறார்.