இந்த வயதில் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா? 5 ஆடம்பர பங்களாக்களுக்கு சொந்தக்காரியா ராஷ்மிகா!
தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற சினிமாக்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
மேலும், தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அண்மையில் கூட தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் இருப்பவர். மேலும் இவருக்கு எதிராக அதிக மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இவ்வளவு சொத்து மதிப்பா?
இந்நிலையில், அண்மையில் ராஷ்மிகா மந்தனா குறித்து மீம் ஒன்று வைரலாக பரவி வந்தது.
அந்த மீமில் 5 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை, பெங்களூரு என 5 இடங்களில் சொகுசு பங்காளவை அவர் வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
#Rashmika owns 5 luxurious apartments in 5 places?#RashmikaMandanna ? pic.twitter.com/9zHBwvPU37
— Nerdy News (@NerdyNews07) February 10, 2023
இந்த மீம்ஸை பார்த்து விட்டு அதற்கு பதிலளித்த ராஷ்மிகா இது உண்மையான இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று பதிலளித்திருக்கிறார்.
இதனைப்பார்த்த அவரின் ரசிகர்கள் இவ்வளவு பாசிட்டிவ்வாக பேசுகிறார் என தெரிவித்து வருகிறார்கள்.