வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட்: டூயட் பாடும் ஜோடிகள்.. லீக்கானது வீடியோ பதிவு.!
விஜயின் அடுத்த படமாக வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா டூயட் ஆடும் காட்சி தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
வாரிசு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படமான “வாரிசு”, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
வைரல் பதிவு
இந்நிலையில், இந்த படத்தில் விஜய் – ராஷ்மிகா டூயட் பாடி ஆடும் பாடல் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக்காகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்த திரைப்படம் (2023) பொங்கள் பண்டிகைக்கு வெளியாகவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது
விஜய் – ராஷ்மிகா டூயட் பாடி ஆடும் ‘வாரிசு’… லீக்கானது பாடல் வீடியோ! pic.twitter.com/sHKH7gOJkX
— Bala (Journalist) (@balamedia_rj) October 18, 2022