Neeya Naana: போதையில் தள்ளாடியபடி நடித்துக் காட்டிய கோபி... அரங்கத்தில் நடந்தது என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் Party அதிகம் செய்யும் கணவர்கள் மற்றும் கோபப்படும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் Party அதிகம் செய்யும் கணவர்கள் மற்றும் கோபப்படும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பார்ட்டி என்ற பெயரில் கணவர் செய்யும் செயலை நினைத்து மனைவிகள் மனம் வருந்தியுள்ளனர். மேலும் பார்ட்டிக்காக வாங்கிய கடனையும் தற்போது வரை அடைக்காமல் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அரங்கத்தில் கோபிநாத் மதுபோதையில் தள்ளாடி வருவதையும் நடந்து காட்டியுள்ளார். குடி போதையிலிருந்து மீள்வதற்கு மன உறுதியும், ஆண்டவரின் அருளும் இருந்தால் மட்டுமே அதிலிருந்து மீள முடியும் என்று சிறப்பு விருந்தினர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |