காலில் தீக்காயத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா: பதறும் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா காலில் தீக்காயத்துடன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த சீரியலில் மீனாவாக நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் ஆரம்பித்தார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது.
பின்னர் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். சில சீரியல்களில் தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் இவரின் பெயரை அறிந்துக்கொண்ட தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக நடிக்கிறார்.
காலில் தீக்காயம்
இந்நிலையில், மீனாவின் புகைப்படம் ஒன்று தற்போது மக்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
மீனா வீட்டில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது சுடுதண்ணீர் வைத்துக் கொண்டிருந்தபோது கைத் தவறி கீழே விழுந்து அவருடைய காலை பாதித்திருக்கிறது.
இதனால் அவருக்கு காலில் தோல் எல்லாம் உரிந்து காலணிகள் போட்டு நடப்பதற்கு கூட சிரமமாக இருப்பதாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.