பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகனா இது? முதன்முறையாக வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மகனின் போட்டோஷுட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் இருந்ததால் சீரியல் சற்று சோகமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த சோக காட்சிகளை சீக்கிரம் முடியுங்கள் என்று கூறிவருகின்றனர்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா அவர்களின் மகனின் முதல் பிறந்தநாள் வந்துள்ளது. முதல் பிறந்தநாள் என்பதால் தன் மகனை வைத்து ஹேமா போட்டோஷூட் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு தனது மகனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.