“இனி ஜீவாவுக்கு 2 பொண்டாட்டி” மாறி மாறி தாலிக்கட்டிய மீனா: ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனா அடித்த லூட்டி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஸ்போட்டில் கணவருக்கும் தங்கைக்கும் மாறி மாறி தாலிகட்டிய மீனாவின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்தப் பாசக்கதையை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள். இவர்கள் நால்வரும் தற்போது திருமணம் செய்து விட்டார்கள். இவர்களின் இரண்டாவது தம்பியான ஜீவாவின் மனைவியாக நடிப்பவர் தான் மீனா என்கின்ற ஹேமா.
இவர் சீரியலில் மட்டுமல்ல சில சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது கொஞ்சலான பேச்சால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் தங்கைக்கு திருமணம் நடைபெற்ற போது மெ வைக்கும் சம்பவத்தில் நான்கு அண்ணன் தம்பிகளும் பாதி பாதியாக பிரிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சீரியல் ஸ்போட்டில் மீனா ஜீவாவிற்கு தாலி கட்டுகிறார் பிறகு அதே தாலியைக் கழட்டி தங்கைக்கு இனி ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி என்று சொல்லிவிட்டு கெசுவல்லாக செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணைத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
— Parthiban A (@ParthibanAPN) March 30, 2023