இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பாலக் கீரை பச்சடி: உடனே தீர்வு கிடைக்கும்
இரத்த சர்க்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும். இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க காலை வேளைகளில் சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த சுவையான பாலக் கீரை பச்சடி!
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
பருப்பு – 50 கிராம்
நெய் – தேவையான அளவு
இஞ்சி – சிறுதுண்டு
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் – சிறிதளவு
கரம் மசாலா – தேவையான அளவு
சர்க்கரை – சிறிதளவு
மிளகு தூள் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி 45 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
பின்னர் தண்ணீரை வடிகட்டி 4 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் முதல் விசில் வந்ததும் மிதமான தீயில் வைத்து விட்டு பின்னர் ஆற விடவும்.
ஆறிய பின்னர் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் கீரையை சுத்தம் செய்து 1கப் அளவு நறுக்கி கொஞ்சம் எண்ணெய்யில் வதக்கிக் கொள்ள வேண்டும்.
வதக்கிய கீரையை ஆறவைத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாகியதும் சீரகத்தை தாளித்து அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளியுடன் உப்பு சேர்த்து மஞ்சள், சர்க்கரை, கரம் மசாலா, மிளகுத் தூள் சேர்த்து மிதமான தீயில் 1 இலிருந்து 2 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் மசித்த அரிசி மற்றும் பருப்பு தேவையான உப்பு சேர்த்து கீரை கலவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் பாலக் கீரை பச்சடி தயார்.