அளவுக்கு அதிகமான சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்கனுமா? வெந்தய தோசையை சாப்பிட்டு பாருங்கள்
இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குவது இந்த சக்கரை வியாதிதான்.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும். இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க காலை மற்றும் இரவு வேளைகளில் சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த வெந்தய தோசை!
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி - அரை கிலோ
- வெந்தயம் - 150 கிராம்
- உளுத்தம் பருப்பு - 50 கிராம்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
இட்லிக்கு மாவை அரைப்பது போல மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்தது மூன்று மணி முதல் 3:30 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்தக் கலவையை நீங்கள் உங்கள் கிரைண்டரில் போட்டு நன்கு அறைத்து எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அடித்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் அரைத்து முடித்து இந்த மாவினை ஒரு பாத்திரத்தில் வைத்து குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது அப்படியே விட்டுவிடுங்கள்.
பிறகு நீங்கள் உங்கள் தோசை கல்லில் எப்போதும் தோசை ஊற்றுவது போல தோசை ஊற்றி எடுத்தால் போதுமானது
உங்களது வெந்தய தோசை தற்போது ரெடி.
இந்த தோசைக்கு சக்கரையை குறைக்கும் அளவிற்கு ஏற்ற துவையல் அல்லது சாம்பாரை சேர்த்து சாப்பிடலாம்.