நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்... பிக்பாஸ் ரித்விகாவிற்கு நடந்தது என்ன?
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரித்விகாவின் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போன நிலையில் இதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளதை இங்கு தெரிந்து கொள்வோம்.
நடிகை ரித்விகா
நடிகை ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். 2013ம் ஆண்டு பரதேசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பின்பு மெட்ராஸ், அழகு குட்டி செல்லம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினி மற்றும் விக்ரமுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளரானார். பின்பு மக்கள் மத்தியில் பிக்பாஸ் ரித்விகாவாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார்.

நின்று போன திருமணம்
இந்நிலையில் ரித்விகா தனது நீண்ட நாள் காதலரான வினோத் லக்ஷ்மனன் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும், கடந்த ஆண்டு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் அவர் தனது இன்ஸ்டாவில் வெிளயிட்டிருந்தார்.
ஆனால் இந்த பதிவு வெளியான சில தினங்களில் அதனை அழித்துவிட்ட நிலையில், திருமணம் நின்றுவிட்டதா என்ற கேள்வி அதிகமாக எழுந்தது. இதற்கு ரித்விகா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் கூறாத ரித்விகா, சமீபத்தில் இன்ஸ்டாவில் "Q&A" என்ற பதிவினை போட்டுள்ளார்.
இவ்வாறான பதிவை பிரபலங்கள் தனது ஸ்டோரியில் போடுவதுண்டு. இதனை அவதானித்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளிப்பது வழக்கம்.
அதே போன்று ரித்விகாவிடம் உங்களது திருமணத்தில் பிரச்சனையா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ரித்விகா, “நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை” என்று பதில் தெரிவித்திருக்கிறார். இதனால் ரித்விகாவின் திருமணம் நின்று போனதை ரசிகர்கள் அறிந்த நிலையில், சோகத்திலும் ஆழ்ந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |