மருமகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மாமனார்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
முதியவரொருவர் தன்னுடைய மகனின் மனைவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
முறையற்ற திருமணங்கள்
பொதுவாக திருமணங்கள் என்பது சொந்தங்கள் இணைந்து கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் ஒரு உறவை உருவாக்கும் ஒரு சடங்காகும்.
ஆனால் தற்போது இருக்கும் சமூகத்தினர் இதனை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதனையே செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தன்னுடைய மகன் இறந்து விட்ட நிலையில் தன்னுடைய சொந்த மருமகளை மாமனார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இறுதியில் வெளியான திடுக்கிடும் உண்மை
இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட மீடியாக்கள் குறித்த இடத்திற்கு சென்று தம்பதியினரை பேட்டி எடுத்துள்ளார்கள்.
அந்த பேட்டியில் பெண், “ என்னுடைய கணவர் இறந்து விட்டார் என்னை பார்த்து கொள்வதற்கு எனக்கு சரியான ஒரு ஆண் தேவை இதனால் தான் என்னுடைய மாமனாரையே நான் திருமணம் செய்து கொண்டேன்” என ஒப்பு கொள்கிறார்.
இதனை தொடர்ந்து அந்த திருமணம் குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட மீடியாக்கள் இது குறித்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றுள்ளார்கள்.
அப்போது தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், “இது முழுவதும் ஒரு ஸ்கிரிப் மாத்திரமே சமூகத்திற்கு முன்னுதாரணம் காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் இதனை செய்தோம்.” என சம்பவத்தையே மாற்றி கருத்து வெளியிட்டுள்ளார்கள்.