ஆண் குழந்தை கேட்டு தொந்தரவு செய்த கணவர் வீட்டார்... கோபத்தில் கர்ப்பிணி பெண் செய்த மோசமான காரியம்
தனது கணவர் வீட்டினர் ஆண் குழந்தை கேட்டு தொந்தரவு செய்ததால் பெண் ஒருவர் ஆண் குழந்தையை திருடியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவதாக கர்ப்பமாகியுள்ளார்.
இவர் கர்ப்பமான நாள் முதல் அவரின் கணவர் மற்றும் மாமியார் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரும் அந்த பெண்ணிடம் அடுத்து ஆண் குழந்தையை பெற்று கொடுக்கவில்லையென்றால் அவரையும் அடுத்து பிறக்கும் குழந்தையையும் சேர்க்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அப்பெண் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் 24 மணி நேரத்திற்குள் பெண் குழந்தை பெற்றெடுக்கவுள்ளதாக பெண்ணிடம் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்ட பெண், மீண்டும் பெண் குழந்தை என்றால் தன்னை வீட்டில் சேர்க்கமாட்டார்கள் என்று பயந்து அங்கிருந்த பிரசவ வார்டுக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை எடுத்துக்கொண்டு குழந்தையுடன் மாயமாகியுள்ளார். குழந்தையைக் காணாமல் அதன் பெற்றோர்கள் தேடியதோடு, பொலிசில் புகார் அளித்துள்ளார்.
பின்பு பொலிசார் அங்கு சிசிடிவி கமெராவை சோதனை செய்தபோது, இந்த பெண் குழந்தையுடன் ரிக்ஷாவில் ஏறி போவதை தெரிந்து கொண்டனர். குறித்த பெண்ணையும் கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் இந்த குழந்தையை 30000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதாக கூறியுள்ளார்.
பெண் குழந்தையை புறக்கணிக்கும் குடும்பத்தினரை சமாளிக்க பெண் ஒருவர் குழந்தையை திருடும் நிலைக்குச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
