பூனை முதல் பொம்மை வரை திருமணம் செய்த நபர்கள் - உலகின் விசித்திரமான திருமணங்கள்;
பொதுவாக திருமணம் என்றாலே ஒரு பெண் ஒரு ஆண் என முறைப்படி திருமணத்தை நடத்துவார்கள். அதன் பின்னர் நாகரீகம் வளர வளர பல திருமணங்கள் வித்தியாசமான முறையில் நடைப்பெற ஆரம்பித்தது.
அதிலும் ஒரு கட்டம் மேலே சென்று, ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என கலாச்சாரம் சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்டியலில் நாம் பார்க்கப் போகும் நபர்கள், விலங்குகள் முதல் உயிரற்ற பொருட்கள் வரை பலவற்றைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
பூனையை மணந்த பெண்
பிரிட்டன் நாட்டில் டெபோரா ஹாஜ் (Deborah Hodge) என்ற 49 வயதுடைய பெண் ஒருவர் பூனையைத் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
சுவரை திருமணம் செய்த பெண்
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இஜா ரீட்டா பெர்லினர் மார் (Eija-Riitta Berliner-Mauer) என்கிற பெண் Objectum-Sexuality என்கிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் உயிரற்ற பொருட்கள் மீது, காதல் வயப்பட்டுள்ளார். சிறுவயதிலேயே பெர்லின் சுவரைத் தொலைக்காட்சியில் பார்த்து இஜா, அதன் மீது காதல் கொண்டார்.
காலப்போக்கில் பெர்லின் சுவரின் படங்களை சேகரிக்க தொடங்கினார். ஒருமுறை பெர்லின் சுவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது, அச்சுவரையே திருமணம் செய்து கொண்ட இஜா ரீட்டா.
ஈபிள் டவரை மணந்த பெண்
இத்தாலி நாட்டை சேர்ந்த எரிகா லாப்ரே (Erika LaBrie) என்கிற 50 வயதுடைய பெண் ஒரு வில் வித்தை வீராங்கனை.
இந்த பெண்மணியும் உயிரற்ற பொருட்கள் மீது காதல் கொள்ளும் ஒரு வினோத நோயால் பாதிக்கப்பட்டவர். கடந்த 2007 ஆம் ஆண்டு உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான ஈபிள் டவரை திருமணம் செய்து கொண்டார்.
அதோடு நின்றால் கூட பரவாயில்லை. தன்னுடைய பெயரை 'எரிகா ஐஃபில்' என மாற்றிக் கொண்டார். \
தன்னைத்தானே திருமணம்
குஜராத்தை சேர்ந்த 24 வயதான ஷமா பிந்து என்ற பெண் கடந்த ஜூன் 8-ம் தேதி வதோதராவில் தன் வீட்டில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.
இப்படி தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதை சொலோகெமி என்று அழைக்கிறார்கள்.
கற்பனை கதாபாத்திரத்துடன் திருமணம்
ஐப்பானை சேர்ந்த அக்கிஹிகோ கோண்டோ (Akihiko Kondo) என்ற 38 வயதுடைய இவர், ஹத்சுனே மிகு (Hatsune Miku) என்கிற கற்பனை கதாபாத்திரத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு டோக்கியோவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதை நான் அறிவேன், அது உண்மை அல்ல என்பதை நான் அறிவேன்.
இருப்பினும் அதற்கு நான் காட்டும் உணர்வுகள் உண்மையானவை, அதுவே எனக்கு போதுமானது என டிபிகல் 90ஸ் கிட் போல தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாம்புடன் திருமணம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விமலா தாஸ் என்கிற பெண்மணி கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு பாம்பைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாம்பு தன் கனவில் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாகவும், அந்தப் பாம்பு தான் முற்பிறவியில் தன் கணவராக இருந்ததாகவும் பிமலா தாஸ் கூறியுள்ளார்.
பொம்மையுடன் திருமணம்
கஜகஸ்தானைச் சேர்ந்த பாடி பில்டர் யூரி டொலோச்கோ (Yurii Tolochko) என்பவர் கடந்த டிசம்பர் 2019 காலத்தில் மார்கோ என பெயரிடப்பட்ட பாலுறவு பொம்மை இடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ப்ரொபோஸ் செய்தார்.
முதலையுடன் திருமணம்
மெக்சிகோ நாட்டின் சான் பெட்ரோ ஹமேலுலா (San Pedro Huamelula) நகரத்தின் மேயர் விக்டர் ஹூகோ கடந்த ஜூலை மாதத்தில் ஒரு முதலையைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர், இயற்கையின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த சிறிய முதலை பூமி அன்னையின் பிரதிநிதியாகவும், மெக்சிகோ நகரத்தின் தலைவர் மனித இனத்தின் பிரதிநிதியாகவும் கருதப்படுகிறது எனக்கூறியுள்ளார்.
மரத்துடன் திருமணம்
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், மெர்சிசைடில் உள்ள செப்ஃடனில், எல்டர் என்ற மரத்தை, 37 வயதான கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இரண்டு குழந்தைக்கு தாயான இவர் வாரத்திற்கு ஐந்து முறை எல்டர் மரத்தை பார்த்து விட்டு செல்கிறார்.
மேலும் பாக்சிங் டே தினத்தன்று மரத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும், கேட் கன்னிங்ஹாம் கூறினார்.
