துலாம் ராசியில் உருவான அரிய யோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?
ஜோதிடத்தின்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.சில நேரங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களையும் உருவாக்குகின்றன.
அந்த வகையில், கிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசி மாறுகிறார். அக்டோபர் 17ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சூரியன் பெயர்ந்தார். ஏற்கனவே துலாம் ராசியில் சுக்கிரன் இருப்பதால், இரு கிரகங்களின் சேர்க்கையால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது.

அதுவும் சுக்கிரனின் சொந்த ராசியில் இந்த யோகம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் காதல் வாழ்வில் மகிழ்ச்சியை என பல வழிகளிலும் சுப பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
அப்படி துலாம் ராசியில் உருவாகியுள்ள சுக்ராதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 7-ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளதால், பணியிடத்தில் நல்ல வெற்றியும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன், குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும்.
துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன், சுக்கிரன் சேர்க்கையால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதனால் நிதி நிலை மேம்படுவதுடன், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
சட்டப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்கள் உண்டாகும்.
தனுசு

தனுசு ராசியின் 11-ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளதால், அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் லாபமும் கிடைக்க்கும்.
பணியிடத்தில் மதிப்பும் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். வேலை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கும் வெற்றி கிடைக்கலாம். மொத்தத்தில், கடின உழைப்புக்கான பலன்களைப் பெறும் காலமாக அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |