மந்திரவாதியை வைத்து இறந்த அப்பாவிடம் ஐடியா கேட்ட வயதான மகன்! லொட்டரியால் கிடைத்த அதிஷ்டம்
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு பெருந்தொகையான பரிசு லொட்டரியில் கிடைத்துள்ள சம்பவம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
லொட்டரி
அமெரிக்காவின் பகுதியை சேர்ந்தவர் வெஸ்ஸி பிரன்சுவிக். வயது (55 வயது), இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதில் அவருக்கு எதிர்பாராத விதமாக பெரும் பணத்தொகை கிடைத்துள்ளது.
இவர் தனது இறந்து போன தந்தை தன்னை தொடர்பு கொண்டு லொட்டரி டிக்கெட்டை வாங்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பரிசு தொகை
இதன் படி அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு சுமார் 33,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 33 லட்ச ரூபாய்) பரிசும் கிடைத்துள்ளது.
மந்தரவாதியின் சூழ்ச்சி
இது குறித்து பலர் அவரிடம் வினவிய போது,
“தன்னுடைய தந்தை நீண்டக்காலத்திற்கு முன்னர் இறந்து விட்டார். இவரை தொடர்புக் கொண்ட போது தான் எனக்கு இந்த டிக்கட்டை வாங்கும் படி கூறினார் எனவும் மேலும் இந்த பரிசில் எனக்கு சுமார் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.
இது குறித்து நான் ஒரு மந்திரவாதியிடம் கேட்டிருந்தேன். அப்போது தான் என்னுடைய தந்தை கூறியது என்று மேற்குறிப்பிட்ட விடயத்தை கூறினார். இதனை தொடர்ந்து நானும் அவர் சொன்னதுபடி செய்தேன் பணம் கிடைத்தது” என மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்தத்த நெட்டிசன்கள் “ இவர் கூறுவது பொய்” எனவும் “மந்திரவாதி தனக்கும் காட்டுங்கள்” எனவும் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.