சொந்த மகனின் மனைவியை திருமணம் செய்த முதியவர்: தள்ளாத வயதில் இதெல்லாம் தேவையா?
70 வயது முதியவர் தனது 28 வயது மருமகளை திருமணம் செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
திருமணம்
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று கூறுவார்கள், ஆனால் இப்போதும் இவ்வாறு கூறுவார்களா என்று கேட்டால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
இப்போது நேற்று பார்த்தால் இன்று காதல் நாளை விவாகரத்து என்றாகி விட்டது, சிலரின் விடயங்களைப் பார்த்தால் ஆனால் சிலர் இதற்கும் மேலே சென்று தங்கள் சொந்த உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்த தொடங்கி விட்டார்கள்.
அப்படியான சம்பவங்கள் தற்போது அதிகரித்தே வருகின்றது என்றும் சொல்லலாம். அவ்வாறான சம்பவம் ஒன்றுதான் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மருமகளை திருமணம் செய்ய மாமனார்
உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர், தனது 28 வயது மருமகளை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் கோட்வாலி பகுதியில் உள்ள சாபியா உம்ராவ் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த கைலாஷ் யாதவ்(70) தான் இவ்வாறு தனது மருமகளை திருமணம் செய்திருக்கிறார். கைலாஷின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்துள்ளனர். அதில் மூன்றாவது பிள்ளையின் மனைவிதான் பூஜா (28). கைலாஷின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் பூஜா இன்னொரு திருமணம் செய்துக்கொள்ளும் முடிவிலிருந்தார்.
இவர் சிலகாலம் மாமனார் வீட்டில் தங்கியிருந்த பூஜா மாமனாருடன் காதல் வயப்பட்டார். அப்போது எதற்கு யாரையோ திருமணம் செய்வதற்கு மாமனாரையே திருமணம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்.
இதனை மாமனாரிடம் தெரிவித்து விட்டு சம்மதம் கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே இவர்களின் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் இந்த திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவவே, இந்த வயதில் உங்களுக்கு இது தேவையா என பலர் கமெண்ட செய்து வருகின்றனர்.