Neeya Naana: சொந்த அக்காவிடம் அரங்கேறிய பண மோசடி... கடும் அதிர்ச்சியில் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் மகள் போல் தங்கையை வளர்த்த அக்கா என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகிய நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் மகள் போல் தங்கையை வளர்த்த அக்கா என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தங்கையை மகள் போன்று வளர்த்துள்ள அக்காவின் எதிர்பாராப்பு, மனக்கஷ்டம் இவற்றினை அரங்கத்தில் கூறி வருகின்றனர்.
பெண் ஒருவர் தான் அதிக பணம் கொடுத்து வாங்கும் புடவை, செருப்பு இவற்றிற்கு அக்கா தடை செய்கின்றார் என்று கூறியுள்ளார்.
ஆனால் குறித்த அக்கா அந்த பணத்தை நகைக்கு போட்டால் எனக்கு சம்மதம், சாதாரண செருப்பு, புடவைக்கு போடுவதில் தனக்கு இஷ்டம் இல்லை.... கஷ்டத்தில் வளர்ந்து தற்போது நல்லா இருக்கிறோம் என்பதற்காக பணத்தை தாறுமாறாக செலவழிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி அனைவரையும் யோசிக்க வைத்துள்ளார்.
மற்றொரு அக்கா தங்கையில் நடைபெற்ற சம்பவம் தான் அரங்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் அக்கா எதார்த்தமாக தான் சென்ற இடத்திலிருந்து தங்கைக்கு ஆடை வாங்கி வந்துள்ளார்.
குறித்த ஆடை விலை குறைவாக இருப்பதால், நாம் இதனை மொத்தமாக வாங்கிவந்து இங்கு அதிக விலைக்கு விற்றுவிடலாம் என்று யோசனை கூற அக்காவும் 50 ஆயிரத்தை பிரட்டி ஆடைகளை வாங்கி வந்துள்ளார்.
ஆனால் ஆடை எதுவும் விற்காமல் இருந்ததை தங்கையிடம் கேட்டுள்ளார். அதற்கு தங்கை யாரும் வாங்கவே இல்லை என்று கூறியுள்ளார். பின்பு தான் தெரிந்தது வாங்கிய உடை அனைத்தும் தங்கையின் அளவுக்கே வாங்கியிருப்பதும், இவை அனைத்தும் அவளுக்காகவே எடுத்துள்ளார் என்பது.
கோபிநாத் குறித்த கதையைக் கேட்டு பண மோசடி நடந்திருக்கு இப்படி உங்களை தங்கை ஏமாற்றியதை நீங்கள் உணரவில்லையா? என்று அதிர்ச்சியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |