84 வருட திருமண வாழ்க்கை தம்பதிகள்: பேரக்குழந்தைகள் எத்தனை தெரியுமா?
ஒரு வயதான தம்பதி, 100 பேரக்குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டி ஆகி உலக சாதனை படைத்திருக்கும் செய்தி தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
84 வருட திருமண வாழ்க்கை
உலகத்தில் பல விடயங்கள் நடக்கும். அவை நமக்கு புதிதாக இருக்கலாம். சில விடயங்கள் அவற்றில் நம்ப முடியாததாக இருக்கலாம். மனிதனது வாழ்க்கை காலம் என வரையறுக்கப்பட்ட காலம் 100 அண்டுகள் என கூறலாம்.
அந்த கால கட்டத்திற்குள் தான் மனிதன் அவனது எல்லா ஆசைகளையும் வாழ்கையையும் நிறைவேற்றிகொள்ள வேண்டும். ஆனால் தற்போது நம்ப முடியாத விடயமாக இணையத்தில் ஒரு உலக சாதனை வைரலாகி வருகின்றது.
பிரேசில் நாட்டை சேர்ந்த இணை பிரியா தம்பதி, Manoel Angelim மற்றும் Mariya De Sousa Dino. இவர்கள் மொத்தம் 84 வருடம் மற்றும் 27 நாட்கள் ஒன்றாக திருமண தம்பதிகளாக இருந்திருக்கிறார்கள்.
இவர்கள் 1936 அம் அண்டு காதலிப்ப ஆரம்பித்துள்ளனர். பின்னர் 1940 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 13 குழந்தைனள் இருந்துள்ளனர். இது செல்ல செல்ல பெரிய குடும்பமாக பெருகியுள்ளது.
இவர்கள் இத்தனை ஆண்டுகள் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ காரணம் காதல்தான் என அந்த மரியா கூறுகிறார். இருந்தாலும் இவர்களின் ஆரம்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை என்றும் இருவரும் புகையிலை விற்று தான் தங்கள் குழந்தைகளை வளர்த்துள்ளனர்.
எவ்வளவு வயது ஆனாலும் Manoel மாலை 6:00 மணிக்கு தனது மனைவியுடன் சேர்ந்து ரேடியோ கேட்பதை வழக்கமாக வைத்துக் கொள்வாராம். இதுவே இவர்களின் வாழ்கையின் முக்கிய மகிழ்ச்சி தருணமாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |