நினைவாற்றலை அதிகரிக்கும் இறால் நெய் ரோஸ்ட் ... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
இறால் மீனில் புரோட்டீன், வைட்டமின் D, கால்சியம், பொட்டாசியம். ஒமேகா 3 என அதிகம் நிறைந்துள்ளதால், இதில், இந்த கொழுப்பமிலம் அதிகம் என்றாலும், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
குறிப்பாக இறால் மீனை வளரும் பிள்ளைகள் அடிக்கடி சாப்பிடுவதால், ஞாபக சக்தியை பெருக்க செய்யும். அஸ்டக்ஸாந்த் இந்த இறாலில் அதிகம் இருப்பதால், ஞாபக சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் இது உதவுவதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.
இதில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. எலும்பு சிதைவினையும் தடுக்கின்றது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த இறால் மீன்களை கொண்டு நாவூரும் அசத்தல் சுவையில் இறால் நெய் ரோஸ்ட் எப்ப செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
உப்பு - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மசாலாவிற்கு தேவையானவை
வரமிளகாய் - 4
மல்லி - 1 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 3 பல்
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 3 மேசைக்கரண்டி
வறுவலுக்கு தேவையானவை
நெய் - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
கெட்டித்தயிர் - 1/4 கப்
செய்முறை
முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள முடியும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் இறாலை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, இறால் நீர் விட்டு, அந்த நீர் வற்றும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாயை போட்டு வறுத்து, தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் மல்லி, மிளகு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வாசனை வரும் வரையில் வறுத்து இறக்கி குளிரவிட வேண்டும்.
பின்னர் வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து வரமிளகாய் மற்றும் வறுத்த மசாலா பொருட்களையும் அத்துடன் போட்டு இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றான அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய்யை ஊற்றி உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையம் சேர்த்து, அத்துடன் கெட்டித்தயிரையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு 10 நிமிடங்களுக்கு பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வேக வைத்துள்ள இறாலை சேர்த்து, மசாலா அனைத்தும் இறாலுடன் சேரும் வரையில் நன்றாக கிளறிவிட்டு, 3 நிமிடங்கள் நன்கு ரோஸ்ட் செய்து இறக்கினால், இவ்வளவு தான் அசத்தல் சுவையில் இறால் நெய் ரோஸ்ட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |