Ethirneechal: நந்தினியை பளார் என அறைந்த கதிர்... தர்ஷனால் எழுந்த பிரச்சனை
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் காதலித்த பெண் வீட்டிற்கு வந்ததால் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். கதிர் அப்படியே குணசேகரனாக மாறி பல மோசமான காரியங்களை செய்து வருகின்றார்.
ஞானத்தையும் ரேணுகாவிற்கு எதிராக திருப்பி கடும் சண்டையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் தர்ஷனின் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார்.
ஆனால் தர்ஷன் வேறு ஒரு பெண்ணை காதலித்து, இந்த திருமணத்தினால் அப்பெண்ணை கழட்டி விட்டுள்ளார். இதுகுறித்து ஈஸ்வரி கேள்விஎழுப்பிய நிலையில், அவரை எதிர்த்துப் பேசியுள்ளார்.
தர்ஷனுக்கு ஆதரவாக கதிர் பேசியதை தட்டிக் கேட்ட நந்தினியை கதிர் பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். குறித்த சீரியலில் அடுத்த நடப்பது என்ன என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |