தினமும் தூக்கத்தை கெடுத்த சேவல் மீது புகார் அளித்த நபர்.... தீர்ப்பு என்ன தெரியுமா?
கேரளாவில் பக்கத்து வீட்டு சேவல் தனது தூக்கத்தை தினமும் கெடுப்பதாக நபர் ஒருவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கத்தை கெடுத்த சேவல்
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப்.
வயதானவரான இவர் தனக்கு நல்ல தூக்கம் இல்லாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது இரவில் தூங்கும் போது பக்கத்து வீட்டு சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவி தூக்கத்தை கெடுத்து வருகின்றதாம்.
இதுகுறித்து சேவலின் உரிமையாளர் அணில்குமாரிடம் ராதாகிருஷ்ண கூறியுள்ளார். அதற்கு உரிமையாளர் சேவல் கூவுவதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டுள்ளார்.
தினமும் சேவல் ராதாகிருஷ்ணனின் தூக்கத்தை கெடுத்து வந்த நிலையில் அவர் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.
இதனால் பொறுமையிழந்த அவர் இதுகுறித்து, வருவாய் கோட்ட அலுவலகத்தில், தனது தூக்கத்தை கெடுக்கும் சேவலை அங்கிருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன், இருவர் வீட்டையும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர்.
அணில்குமார் தனது சேவல் கூண்டை மேல் தளத்தில் வைத்திருப்பதால் அதன் கூவல் அதிகமாக கேட்டு ராதாகிருஷ்ணனின் தூக்கம் கலைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
சேவல் கூண்டை அடுத்த 14 நாட்களுக்குள் கீழ் தளத்தின் தெற்கு பகுதிக்கு மாற்ற அணில்குமாருக்கு அவகாசம் அளித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |