கணவருடன் நெருக்கமாக நயன்தாரா! நினைச்சா தோணும் இடமே என உருகும் விக்னேஷ்
தன் மனைவி நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
நயன் விக்கி தம்பதிகள்
நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இருவரது திருமணத்துக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இருவரது திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவுகள், நயன்தாரா அணிந்திருந்த உடை என அனைத்தும் செய்திகளானது.

திருமணத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களை பத்திரிகயாளர்கள் புகைப்படங்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி, திருப்பதி கோவிலில் நயன்தாரா காலணி அணிந்திருந்தாக சர்ச்சையானது.
பத்திரிகையாளர்கள் சூழந்துகொண்ட பரபரப்பில் காலணி அணிந்திருந்ததை கவனிக்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புகேட்டு திருப்பதி கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

விக்கி வெளியிட்ட புதிய புகைப்படம்
இருவரும் தாய்லாந்து நாட்டில் தங்கள் தேனிலவு நாட்களைக் கழித்து இந்தியா திரும்பிய நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன், நினைச்சா தோணும் இடமே என காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் நான் பிழை பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார்.