நயன்தாரா திருமணத்திற்கு ரஜினிகாந்த் அளித்த பரிசு! வாயடைத்துப் போன தம்பதிகள்
நடிகை நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தம்பதிகளுக்கு கொடுத்த பரிசு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை நயன்தாரா விக்கி திருமணம்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
குறித்த திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்திவிட்டு சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் நயன்தாரா விக்கி தம்பதிகள் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
ரஜினிகாந்த் அளித்த அதிர்ச்சி பரிசு
இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்தக்கொடுத்த ரஜினிகாந்த், குறித்த தம்பதிகளுக்கு அளித்துள்ள பரிசு தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மணமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன் தரப்பிலிருந்து, முப்பது சவரன் தங்க நகைகள் மணமக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியே கசிந்த நிலையில் ரசிகர்கள் குஷியில் காணப்படுகின்றனர்.
இன்று நடைபெற்ற பிரஷ்மீட்
நயன்தாரா தம்பதிகள் இன்று முதன்முதலாக பத்திரிக்கை நண்பர்களை அழைத்து ப்ரஷ் மீட் கொடுத்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் தான் முதன் முதலாக கதை கூறுவதற்கு நயன்தாராவை காணச் சென்ற ஹொட்டலில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
நேரலையில் வந்த குறித்த தம்பதிகள் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர். ஹனிமூன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நயன்தாரா வெட்கத்தில் சிரித்த நிலையில், விக்கியின் முகமும் மகிழ்ச்சி ததும்பியது. ஆனால் இந்த கேள்விக்கு கடைசி வரை பதில் அளிக்காமல் சென்றுவிட்டனர்.