சென்னைக்கு ஆதரவாக ஐபிஎலில் ஜோடியாக இறங்கிய பிரபலங்கள்! காத்தாய் பரவும் புகைப்படங்கள்
தன்னுடைய அன்பு கணவருடன் ஐபில் கிரிக்கட் கிரவுண்டில் சுற்றி நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லேடி சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் பல திரைபடங்கள் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு அழகிய ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வில்லை. பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நயன்தாரா இயக்குநர் “நிலேஷ் கிருஷ்ணா” இயக்கத்தில் நயனின் 75வது படம் வெளிவரவிருக்கிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய் ,ரெடின் கிங்ஸ்லி, சத்யராஜ் என பல பிரபலங்கள் நடிக்கவுள்ளார்களாம்.
ஐபிஎல் கிரவுண்டில் சுற்றிய பிரபலங்கள்
இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களை காண பல பிரபலங்கள் ஆவலாக படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் போட்டிகள் இடம்பெற்றன.
இந்த போட்டியை பார்க்க நயன் அவருடைய கணவர் விக்னேஷ்சிவனுடன் வருகை தந்துள்ளார். அப்போது அங்கு அனிருத்தும் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், “நயனின் அழகு இன்னும் குறையவில்லை” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.