முடிவுக்கு வந்த நயன்தாராவின் திருமண ரகசியம்! கல்யாணம் எப்போ தெரியுமா?
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவால் மலர்ந்த காதல்
நானும் ரெளடி தான் படத்தில் நடிக்கும் போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. அதற்கு பிறகு விழாக்கள், வெளிநாடு என இருவரும் ஜோடியாகவே வலம் வர துவங்கினர்.
இவர்கள் தங்கள் காதலின் நினைவாக ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, பல படங்களை தயாரித்து சர்வதேச விருதுகளை அள்ளி வருகிறார்கள்.
தேர்வறையில் மாணவனின் நடனம்! திகைத்து நின்ற ஆசிரியை
ரகசிய நிச்சயதார்த்தம்
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சோஷியல் மீடியாவில் என்ன போஸ்ட் போட்டாலும் உடனே அது டிரெண்டிங் ஆகிவிடும். அந்த அளவிற்கு அனைவரின் ஃபேவரைட் ஜோடி இவர்கள்.
கடந்த ஆண்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா, தான் கையில் அணிந்திருப்பது நிச்சயதார்த்த மோதிரம் என தெரிவித்த நிலையில், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பது உறுதியாகியது.
2022 ல் கண்டிப்பாக திருமணம்
இந்நிலையில் இந்த வருடம் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறி வந்த நிலையில், தற்போது வரும் ஜுன் மாதம் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இடம் இன்னும் ரகசியமாக இருந்துவரும் நிலையில், கேரளாவிலோ அல்லது வெளிநாட்டிலோ திருமணம் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக நயன்தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த ஆண்டிற்குள் திருமணத்தை முடிக்க முடிவு செய்து விட்டார்களாம்.