களைகட்டப்போகும் ஐபிஎல் 2023 போட்டி - மைதானத்தில் கண்கவர் ட்ரோன் ஒளி ஜாலம்
இன்று தொடங்கவுள்ள ஐபிஎல் 2023 போட்டி விழா களைக்கட்டப்போகிறது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் இன்று முதல் மே 28-ம் திகதி வரை நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடனமாடப்போகும் முன்னணி நடிகைகள்
கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் துவக்க விழா நடத்தப்படவில்லை. கொரோனா காரணமாகவும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாகவும் துவக்க விழா நடைபெற வில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் மீண்டும் துவக்க விழாவுடன் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெறும் அரை மணி நேரம் மட்டும் இந்த துவக்க விழா நடைபெற இருக்கிறது. விழாவில், நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். அதற்காக அவர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கண்கவர் ட்ரோன் ஒளி ஜாலம்
இன்று இரவு 7.30 மணிக்கு இந்த துவக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், கண்கவர் ட்ரோன் ஒளி ஜாலம் நடத்தப்பட உள்ளது.
Get ready for an enchanting spectacle at Narendra Modi Stadium tomorrow as the IPL 2023 opening ceremony promises to light up the skies with an incredible drone show.pic.twitter.com/Pp49wqw9Mm
— IPLnCricket | Everything 'Cricket' & #IPL2023 ? (@IPLnCricket) March 30, 2023
IPL opening ceremony will have a drone light show. #IPL2023 #IPLonJioCinema #IPLonStar pic.twitter.com/ThfHnrSXOv
— Crichype (@crichype) March 30, 2023
I wish they play calm down tomorrow during innings break with 1 lakh+ ppl. With these lights show#IPL2023 https://t.co/UbYxGRbwYJ
— LC ? (@TweetECricket) March 30, 2023