நயன்தாரா - விக்னேஷ்சிவன் காதலிக்கும் போது லீக்கான வீடியோ பதிவு!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலிக்க ஆரம்பித்த போது எடுக்கபட்ட அரிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா. கடந்த ஜுன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் காதல் ‘நானும் ரவுடிதான்’என்ற திரைப்படத்தில் தான் ஆரம்பமானது.
இந்நிலையில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்பட ஹீட்டிங்கில் நயனை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ள காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வைரல் வீடியோ பதிவு
மேலும், இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன், ‘7 ஆண்டுகளுக்கு முந்தைய சந்தோஷமான அனுபவம். இந்த படம் எனக்கு எல்லாவற்றையும் தந்தது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.