முதலாவது திருமண நாளில் குழந்தைகளை மறைக்காமல் காட்டிய நயன்: தீயாய் பரவும் புகைப்படங்கள்!
திருமண நாளில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிந்திருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார். 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார்.
அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
குழந்தைகளுடன் நயன்
நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயர் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நயனும் விக்னேஷ் சிவனும் இன்று தங்களது முதலாவது திருமண நாளைக் கொண்டாடுகின்ற வேளையில் நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.