முதல்முறையாக குழந்தையுடன் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்! போஸ்ட் போட்டு வாழ்த்து கூறிய கணவர்
குழந்தைகள் பிறந்த போது நயன்தாரா குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
முதல்முறையில் குழந்தையுடன் இருக்கும் நயன்தாரா
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இன்றைய தினம் உலக அன்னையர் தினம் என்பதால் நயனின் குழந்தைகள் பிரசவத்தின் போது நயன்தாரா குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படங்களை விக்னேஸ்சிவன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில் குழந்தை நயன்தாராவின் முகத்தை கையால் தீண்டுகிறது. இந்த தருணத்தை நினைவுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், நயனுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.