70 கிலோ எடையை இப்படித்தான் குறைத்தது எப்படி? லேடி சூப்பர் ஸ்டாரின் பிட்னஸ் சீக்ரெட்
லேடி சூப்பர் ஸ்டாரா வலம் வரும் நயன்தாரா தான் எப்படி உடல் எடையை குறைத்து அழகாக மாறினார் என்பதை அவரே கூறியிருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.
2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்.
பிட்னஸ் சீக்ரெட்
நயன்தாரா உடல் எடையைக் குறைப்பதற்கு யோகா மற்றும் ஜிம் வேர்க் அவுட் மிகவும் உதவியதாம். இவர் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் யோகா செய்வாராம்.
இவரின் டயட் ப்ளானில் கண்டிப்பாக இளநீர் இருக்குமாம். அதிலும் உடற்பயிற்சி எல்லாம் முடித்து விட்டு வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவாராம்.
தினமும் காலை உணவு கண்டிப்பாக ஸ்மூத்திதான் இது உடல் எடையைக் குறைப்பதற்காகவும் உடலில் சக்தியை அதிகரிப்பதற்காகவும் இந்த ஸ்மூத்தி உதவுகிறது.
மேலும், மதிய உணவாக முட்டை, இறைச்சி, காய்கறிகள் என அனைத்தையும் சம அளவில் உண்பாராம் அதிலும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணுவதில்லையாம்.
தினமும் 8 மணி நேரம் தூக்கம் மிகவும் முக்கியமாகும் ஏனெனில் உடல் எடையைக் குறைக்க தூக்கம் மிகவும் அவசியமாம்.