விவாகரத்திற்கு பின்பு திருமண நாளில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்: வைரலாகும் சோகமான பதிவு
நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்த சமந்தா நாக சைதன்யா 4 ஆண்டு திருமண வாழ்க்கையினை கடந்த வாரத்தில் முறித்துக் கொண்டுள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே சமந்தா பிரபல தெலுங்கு நடிகரும், நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் 2017ம் ஆண்டு 7ம் திகதி மிக பிரமாண்டமாக கோவாவில் நடந்தது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வெறும் 4 ஆண்டுகளில் பிரிந்துள்ளனர்.
இன்று இவர்களின் திருமண நாளாக இருந்ததால் இவரின் பதிவிற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய திருமண நாளான இன்று, சமந்தா வெள்ளை நிற உடையில் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள்.
பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி. இப்படி எனக்கு பிடித்த @ekaco நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை, நிலையான பேஷன் தினம், அக்டோபர் 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு FDCI x Lakmé ஃபேஷன் வீக்கில் பாருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.