இரட்டை குழந்தை சர்ச்சைக்கு கூலாக பதிலடி கொடுத்த விக்னேஷ்! இப்படியொரு ரொமான்ஸா?
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிகளின் இரட்டைக் குழந்தை சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், விக்கி கூலாக வெளியிட்டிருக்கும் ரொமான்ஸ் புகைப்படம் சைலண்டாக பதிலடி கொடுத்துள்ளதை காட்டியுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ்
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கினார் விக்கி.
இப்படத்தின் போது அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.
7 ஆண்டுகள் தொடர்ந்த இவர்களின் காதலுக்கு கடந்த ஜுன் மாதம் திருமணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகியுள்ளதாக விக்கி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
வாடகை தாய் மூலம் குழந்தையா?
ஆம் வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. திருமணத்துக்கு முன்பே முடிவு செய்து இருவரும் குழந்தை பெற்றுள்ளனர். இவர்களுக்கு குழந்தை பிறந்ததன் பின்னணியில் விதிமீறல்கள் இருப்பதாக பரபரப்பு புகார்களும் முன் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த இரட்டை குழந்தைகள் சர்ச்சை அதிகமாக கிளம்பிவரும் நிலையில், விக்கி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கும் ரொமான்ஸ் புகைப்படம் சைலன்ட் பதிலடியாக கூறப்படுகின்றது.
குறித்த சர்ச்சைகள் குறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படாவிட்டாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில்,‘என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என்ற பாட்டுக்கு ஏற்றார் போல் இருவரும் புன்னகையோடு போஸ் கொடுத்துள்ளனர். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கவே விக்னேஷ் சிவன் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளதாக கருதப்படுகிறது.