வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற விரும்புகிறீர்களா?அப்போ இதை கண்டிப்பாக பண்ணுங்க
ஒரு சில தம்பதிகளுக்கு குழந்தையின்மை என்பது பெரும் வலியை ஏற்படுத்தும் இதனால் ஒரு சில தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளவார்கள்.
இவ்வாறு குழந்தைப் பெறவுள்ளவர்கான சிறந்த பதிவுதான் இது.
சில தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் பெரும் சோகத்தில் இருப்பார்கள். இதற்கு ஒரு தீர்வு தரும் வகையில் மருத்துவ தொழிநுட்பங்களின் மூலம் நடைமுறைக்கு வந்தது தான் இந்த வாடகை தாய் முறை.
ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காக தன் கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்றுக் கொடுப்பது தான் வாடகைதாய்முறை.
வாடகைத் தாய் முறை
இந்த வாடகைத்தாய் முறையானது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறவுள்ளவர்களுக்கு சில விதிமுறைகள் உள்ளது. அதாவது,
- வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறவுள்ள தம்பதிகள் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆக இருக்க வேண்டும்.
- வாடகை தாயாக இருந்து குழந்தைப் பெற்றுக் கொடுக்கும் பெண்ணுக்கு 3ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீடு பெற வேண்டும்.
- இந்தக் காப்பீடானது கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின்னும் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்கு போதுமானதாக இருக்க வேண்டும்.
- வாடகைத் தாய் தம்பதிகள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும்.
- அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இருத்தல் வேண்டும்.
- லிவிங்டுகெதரில் வாழ்பவர்களும், கணவன் அல்லது மனைவி இல்லாமல் பிரிந்து வாழ்பவர்களும் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற முடியாது.
இவற்றையெல்லாம் மீறி சட்டவிரோதமாக குழந்தைப் பெற்றால் 10 ஆண்டுகள் வரை சிறையும், 10 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும்.