உங்கள் ராசிப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஆரோக்கியமாக வாழ டிப்ஸ்! வாழ்ககையே திசை மாறும் அதிசயம்
நாம் அனைவருமே, நோயின்றி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
உடல் நலத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணியை பின்பற்றலாம். ஜோதிட அடிப்படையில், உங்கள் ராசியை மையமாக வைத்து உங்களுடைய உடல்நலம், முழு ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு, சீர்படுத்த முயற்சிக்கலாம்.
ராசி அடிப்படையில், உங்கள் பலம் மற்றும் பலவீனம் என்ன, நீங்கள் எதில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருப்பீர்கள், உணவுப்பழக்கம் மற்றும் சிறந்த உணவுகள், உங்களுக்குப் பொருந்தும் உடற்பயிற்சி, ஆகியவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு ராசிக்கும் பொருந்தக்கூடிய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பற்றிய குறிப்புகள்
மேஷம்
மேஷம் ராசியைச் சேர்ந்தவர்கள் தைரியமானவர்கள், சாகசம் மற்றும் போட்டியை விரும்புபவர்கள் மற்றும் எல்லா இடங்களிலும் முதலில் இருப்பதில் நிபுணர்.
அதே நேரத்தில் இவர்களின் உணர்ச்சிவசப்படும் இயல்பின் காரணமாக, ஸ்திரமாக இருக்க முடியாது. இவர்கள் தங்கள் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் ஆழமான நம்பிக்கையைப் பயன்படுத்தி சிறந்த முறையில் வாழ்வில் முன்னேற முடியும். கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள் இவர்களுக்குப் பொருந்தும்.
மேஷ ராசிக்காரர்கள் காரமான மற்றும் இறைச்சி உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். எனவே, அசிடிட்டி, முகப்பரு, செரிமானக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் வீக்கம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம்.
எனவே, அதிக காரமான மற்றும் சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், செரிமானம் சீர் செய்ய உதவும் பூண்டு, இஞ்சி, இலவங்கம், இலவங்கப்பட்டை, எலுமிச்சை மற்றும் மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட வேணும். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷபம் ராசியினர், அமைதியான மனநிலைக் கொண்டவராகவும், மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள். உணவுப் பிரியர்களான ரிஷப ராசியைச் சேர்ந்தார்கள், ரிச் ஃபுட்ஸ் எனப்படும் மிகுந்த சுவையுடைய, அதிக கொழப்பு மற்றும் கலோரிகள் கொண்ட உணவு உண்பதோடு மட்டுமல்லாமல், அதிக ஓய்வில் ஈடுபடுவது இவர்களை பருமனடையச் செய்கிறது.
கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது இவர்களுக்கு கடினமாக இருக்கும். எனவே, இலகுவான பயிற்சிகளான சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளை இயற்கையான சூழலில் அல்லது வீட்டிலேயே செய்யலாம்.
நடனம், நாயுடன் நடை பயிற்சி, தோட்டக்கலை போன்ற செயல்பாடுகள் மீது இவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்கள் உடல் பருமன், டான்சில்லிடிஸ், தொண்டை அழற்சி, தைராய்டு போன்றவற்றால் ரிஷப ராசிக்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அறிவார்ந்தவர்கள், விழிப்புணர்வு கொண்டவர்கள் மற்றும் சிந்தனையாளராக அறியப்படுகிறார். உடற்பயிற்சி என்று வரும் போது, உறுதியாக இருப்பது, தொடர்ந்து பயிற்சி செய்வது இவர்களுக்குக் கடினம் அல்ல.
மிதுன ராசியினர் ஆரோக்கியமாகவும், நெகிழ்வாகவும் இருக்கவே விரும்புகிறார்கள். இவர்கள் ஒரு குழுவாகவும் வேலை செய்ய விரும்புகிறார்கள்.
எனவே, ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஏரோபிக்ஸ், நடனம், டென்னிஸ் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கு ஏற்றது.
இவர்களுக்கு, சுவாச ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட ஆஸ்துமா, இருமல், நரம்பு அழற்சி, வறண்ட சருமம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இவர்கள் மூச்சுபயிற்சி செய்வதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அதிக உணர்திறன் கொண்டவர்கள் மட்டுமல்ல, மிகவும் உணர்ச்சிபூர்வமானவர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புபவர்கள்
. அதே நேரத்தில் கடின உழைப்பாளியும் கூட. நீச்சல் இவர்களுக்கு சிறந்த பயிற்சி. இவர்கள் வயிற்றுப்பகுதிக்கு உடற்பயிற்சி செய்வது நல்லது.
மெதுவான வளர்சிதை மாற்றம் மற்றும் மோசமான செரிமானப் பிரச்சனையால் இவர்கள் பாதிக்கப்படலாம், இதன் காரணமாக அவை தோல் நோய்கள், நீரிழிவு, புண்கள், நெஞ்செரிச்சல், இரைப்பை கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் மது, எண்ணெய் உணவுகள், பால் பொருட்கள், அசைவ உணவு மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கரார்கள் உடற்பயிற்சி செய்ய விரும்புகின்றனர், ஆனால் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவும் விரும்புகிறார்கள். எனவே ஒரு தனிப்பட்ட பயிற்சியாளரின் கீழ் சிறப்பாக செயல்பட முடியும்.
இசையில் அதிக விருப்பம் கொண்டிருப்பதால் ஏரோபிக் நடனம் பொருத்தமாக இருக்கும். இவர்கள் உடலை நிறைய ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும் என்பதால், யோகா, விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஆகியவை உதவும்.
அவர்கள் மாரடைப்பு, முதுகெலும்பு பிரச்சனைகள், குடல், பித்தப்பை, செரிமான பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, போன்றவற்றால் பாதிப்படையும் வாய்ப்புள்ளதால், கால்சியம் மற்றும் புரதம், பால் பொருட்கள், ஆரஞ்சு, ஆப்பிள், கொட்டைகள், சாலடுகள் நிறைந்த, வீட்டில் சமைத்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவர்கள் அதிகம் பழங்களும் சாப்பிட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிக மென்மையான மனிதர்கள். இவர்களால் நீண்ட நேரம் ஓய்வில் இருக்க முடியாது என்பதால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யவே விரும்புகிறார்கள்.
நீண்ட தூரம் ஓடுவது, சைக்கிள் ஓட்டுதல், கால்பந்து, ஸ்குவாஷ், கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், ராக் க்ளைம்பிங் போன்ற உயர் சகிப்புத்தன்மை பயிற்சிகளை மேற்கொள்ள இவர்கள் இயற்கையாகவே திறன் கொண்டுள்ளனர்.
இவர்கள் துரித உணவை தவிர்க்க வேண்டும். பச்சை பீன்ஸ் மற்றும் காளானுடன் கால்சியம் அதிகமாக உணவில் இருக்க வேண்டும். கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், பூண்டு ஆகியவை முக்கியம். குடல் மற்றும் செரிமான பிரச்சனைகள் இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் என்பதால், அவர்களின் உணவில் அதிக காய்கறிகள் மற்றும் கீரைகள் சேர்க்கப்பட வேண்டும்.
துலாம்
லோ-இம்பாக்ட் கார்டியோ மற்றும் ஸ்ட்ரெச்சிங் போன்ற மென்மையான உடற்பயிற்சிகளில் துலாம் ராசியினர் கவனம் செலுத்த வேண்டும். முதுகுப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், முதுகில் அழுத்தத்தை உண்டாக்கும் கனமான பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
இவர்கள் வறண்ட சருமம், தூக்கமின்மை, தண்டுவட பாதிப்பு, சிறுநீர் பாதை தொற்று, வெனரல் நோய் போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். உணவில் நிறைய தண்ணீர், ஜூஸ் மற்றும் சூப்கள் இருந்தால் நல்லது.
வேகவைத்த உணவு, பூண்டு, இஞ்சி, தயிர் ஆகியவை அவர்களின் உணவில்சேர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தீவிரமானவர்கள். எனவே இவர்களின் ஆற்றலுக்கு ஏற்ற குத்துச்சண்டை, தற்காப்புக் கலைகள் போன்ற கடுமையான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம்.
ஆனால், கூடுதலாக, இவர்கள் தசைகள் சீர்செய்ய, மன அழுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அகற்ற இவர்கள் மென்மையான உடற்பயிற்சியான யோகா மற்றும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
காரமான உணவு, சிவப்பு இறைச்சி, மது, அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆகியவற்றை இவர்கள் விரும்புவார்கள். செரிமான பாதிப்பு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது, அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
தனுசு
இவர்களை முற்றிலுமாக ஆரோக்கியமாக இருந்தாலும், நிறைய சாப்பிடுவதால் அதை சமன் செய்ய உடற்பயிற்சி தேவை.
அவர்கள் இடுப்பு மற்றும் தொடைகள் பருமனாக இருப்பதால், கல்லீரல் கோளாறுகள், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுவதால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சி செய்யும் போது, வயிறு, இடுப்பு மற்றும் தொடைகளில் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஜன்க் உணவு, மசாலா பொருட்கள், கொழுப்புகள், அதிகப்படியான இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும். தனுசு ராசியினர் முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், பூண்டு, இஞ்சி, முலாம்பழம், பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் பழக்கம், நிலையான முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உடற்பயிற்சி முறையை பின்பற்றவே விரும்புவார்கள்.
முழங்கால்கள், எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.
மூட்டுவலி, காயங்கள், எலும்பு நோய், அமிலத்தன்மை, சைனசிடிஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சூடான சூப்கள், காளான், கடல் உணவு, பழங்கள், கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எந்த ஒரு வழக்கத்திற்குள்ளும் கட்டுப்படுத்தப்படுவதை விரும்புவதில்லை, எனவே தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வெவ்வேறு நாட்களில் பல்வேறு பயிற்சிகளை செய்யவே விரும்புகிறார்கள். இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது இவர்களுக்கு மிகவும் அவசியமானது.
எனவே ஓட்டம், நீச்சல் போன்ற நடவடிக்கைகள் கும்ப ராசியினருக்கு ஏற்ற பயிற்சிகள் ஆகும். முதுகெலும்பு பிரச்சனை, காலில் பாதிப்பு, காயங்கள் , இரத்தக் கோளாறுகள், கணுக்கால் வீக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம். இவர்கள் அதிக மாவுச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீனம் விளையாட்டு ராசியினர் அல்ல, எனவே இவர்கள் எந்தவொரு தீவிரமான செயலையும் தவிர்க்க வேண்டும். மென்மையான பயிற்சிகளான யோகா, நடனம், நீர் விளையாட்டு – உடற்பயிற்சி இவர்களுக்கு சிறந்தது.
இவர்களுக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், எப்போதும் மது அல்லது போதை பழக்கத்தில் ஈடுபடக்கூடாது.
அதிக நார்ச்சத்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். நீராவி நறுமண சிகிச்சைகள் போன்ற ஓய்வெடுக்கும் சிகிச்சைகள் தொடர்ந்து செல்ல வேண்டும். காற்றோட்டமான பானங்கள், காரமான உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். உணவில் அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்.