வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா? யாரெல்லாம் தொடவே கூடாது!
இளநீரை நீங்கள் அதிகமாக பயன்படுத்துவது உங்களுக்கு பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.
தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம்,
நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.
இளநீர் உடலில் பல செரிமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், ஃபோலேட், செலினியம் மற்றும் கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் தேங்காய் நீரில் உள்ளன.
உடலுக்கு ஆற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகள் இதில் உள்ளன. இருப்பினும் இந்த தேங்காய் நீர் சில பக்க விளைவுகளையும் உண்டாக்குகிறது.
இளநீரின் தீமைகள்
நீரிழிவு
குடல் பிரச்சினை
ரத்த அழுத்தம்
தேங்காய் நீர் உங்க இரத்த அழுத்தத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. தேங்காய் நீர் குடிப்பதால் உங்க இரத்த அழுத்தம் கணிசமாக குறையும்.
எனவே குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இளநீர் குடிப்பது உங்க சோடியம் அளவை பாதிப்படைய செய்யலாம். யு.எஸ். வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, ஒரு கப் புதிய தேங்காய் நீரில் 252 மி.கி சோடியம் உள்ளது.
இது பெரும்பாலான மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது, ஆனால் உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
அழற்சி உள்ளவர்கள்
அழற்சி இருப்பவர்களுக்கு தேங்காய் நீர் நல்லதல்ல. உணவு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தேங்காய் நீர் பலவித பிரச்சினைகளை உண்டாக்கும். இது அழற்சியை ஏற்படுத்தி பலவித நோய்த்தொற்றுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகிறது
தேங்காய் நீரை அதிகமாக உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமாக குடிப்பதால் ஹைபர்கலேமியா ஏற்படலாம். ஹைபர்கலீமியா என்பது பலவீனம், நனவு இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
தேங்காய் நீரை குடிக்கிறீர்கள் என்றால் அதை பாதுகாப்பாக குடிக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான இளநீர் உயிரிழப்பை கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
கலோரி அளவு
தேங்காய் நீரின் கலோரிகள் அதிகம். 11 அவுன்ஸ் தேங்காய் நீரில் 60 கலோரிகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பு :ஒரு கோப்பை தேங்காய் நீரில் 92 கலோரிகள் உள்ளன.
இது எடையை அதிகரிக்க உதவுகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு
தேங்காய் நீர் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மை அல்ல. ஏனெனில் விளையாட்டு வீரர்கள் இதை குடிக்க முடியாது. தேங்காய் நீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது.
மற்ற விளையாட்டு பானங்களுடன் ஒப்பிடும்போது தேங்காய் நீரில் சோடியத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. தேங்காய் நீரை உடனடியாக உட்கொள்ள வேண்டும்.
திறந்த பிறகு வைத்திருந்து குடிக்கக் கூடாது. ஏனெனில் ரெம்ப நேரம் திறந்து வைத்தால் ஊட்டச்சத்துக்கள் இழப்பு ஏற்படலாம்.