எனக்கு பிடிக்காத அந்த விஷயத்தை நயன்தாரா செய்தாங்க... - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!
எனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை நயன்தாரா செய்தார்கள் என்று விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
எனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்த நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.
இவர் கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில்,
நான் ஒருவர் ‘நானும் ரவுடி தான்’ படத்திற்காக நடிகை நயன்தாரா விடம் கதை சொல்ல சென்றேன். அப்போ, நயன்தாரா உங்களுக்கு குடிக்க என்ன வேண்டும் என்று கேட்டார். எதுனாலும் ஓ.கே. மேடம் என்று சொன்னேன். உடனே நயன்தாரா கிரீன் டீ கொண்டு வந்து கொடுத்தார்.
ஆனால், எனக்கு கிரின் டீ பிடிக்காது. இருந்தாலும் நயன்தாரா கொடுத்தால் நான் வாங்கிக்கொண்டேன். கிரீன் டீ என் எதிரிக்கு கூட கொடுக்கக்கூடாது நான் நினைப்பேன். ஆனால், என்ன செய்வது நயன்தாரா கொடுத்துவிட்டாங்களே.
அந்த கிரீன் டீயை குடிப்பது போல் நான் நடித்தேன். கதை சொல்லிக்கொண்டிருந்ததால் நயன்தாரா அதை கவனிக்கவில்லை. இதன் பிறகு நானும், நயன்தாராவும் நட்பாக பழகி வந்தபோது எனக்கு கிரீன் டீ பிடிக்காது என்று அவரிடம் கூறினேன். அதிலிருந்து எனக்கு நயன்தாரா கிரீன் டீ கொடுக்க மாட்டார் என்றார்.