காதலர் விக்கிக்கு நயன்தாரா எத்தனை கோடிக்கு பரிசளித்தார் தெரியுமா? வாயடைத்துப் போன திரையுலகம்
நயன்தாராவின் ரூ. 20 கோடி மேட்டரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நயன்தாரா விக்கி திருமணம்
நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஜுன் 9ம் தேதி குடும்பத்தினரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் முடித்துள்ளனர்.
இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பொன் மற்றும் வெள்ளியினை பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்திருப்பார் நயன்தாரா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.


விக்கி குடும்பத்திற்கு நயன்தாரா அளித்த பரிசு
மேலும் திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனுக்கு ரூ. 20 கோடி மதிப்புள்ள பங்களாவை பரிசாக நயன்தாரா கொடுத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.
இதே போன்று விக்கியும் நயன்தாரா திருமணத்தன்று அணிந்திருந்த நகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இதன் மதிப்பு மட்டும் ரூ. 2.5 கோடி முதல் ரூ. 3 கோடி என்ற நிலையில், இது தவிர ரூ. 5 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தையும் நயன்தாராவுக்கு பரிசளித்துள்ளார்.
மேலும் நயன்தாரா விக்கியின் சகோதரி ஐஸ்வர்யாவிற்கு 30 சவரன் நகை மற்றும் அவரது உறவினர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் என கொடுத்து அசத்தியுள்ளார்.
