Bigg Boss 10: மீண்டும் ஆட்டத்தையே மாற்றிய வாசன்... பொங்கி எழுந்த ஜேசன்
Vasan Game Changer: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ப்ரித்வி, வாசனுடன் சேர்த்து ஷாந்திகாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், வாசன் வைத்த டுவிஸ்ட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது. கடந்த வாரம் பிக்பாஸ் குரல் இல்லாமல் பிக்பாஸ் வீடு சென்றது.
இந்நிலையில் கடந்த வாரம் முத்தழகி, அவினாஷ் இருவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் 10 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த வாரம் வீட்டின் தலைவராக தன்யா இருந்து வரும் நிலையில், நேற்றைய தினம் ஜேசன் தன்யா இடையே வாக்குவாதம் பயங்கரமாக இருந்துள்ளது.
இந்த வாரம் வினோத், அன்சர், தன்யா மூவரைத் தவிர மற்ற ஏழு பேர் நாமினேஷனில் இருக்கின்றனர். கடந்த வாரத்தைப் போன்று இந்த வாரமும் இரண்டு எவிக்ஷனா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
ஆட்டத்தை மாற்றிய வாசன்
இந்நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்களுக்கு சிறிது பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தினை பயன்படுத்தி தனது சக போட்டியாளர்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டுமாம்.
அந்த வகையில் வாசன், ஷாந்திகா, ப்ரித்வி, முனியம்மா ஆகியோர் மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்தனர். இதில் ப்ரித்வி வாசனிடம் வந்து டீல் பேசியுள்ளார்.
அதாவது ஷாந்திகாவிடம் ஒரு பணம் மட்டுமே இருக்கின்றது என்றும் அவரை கொலை செய்துவிட்டால் அவர் வெளியே சென்றுவிடுவார் என்று கூறியுள்ளார். இதற்கு வாசனும் சரி என்று கூறியுள்ளார்.

ஆனால் உள்ளே சென்ற வாசன் சட்டென யாரும் எதிர்பார்க்காமல், தன்னிடம் டீல் பேசிய ப்ரித்வியையே சுட்டுக் கொலை செய்துள்ளார். இதனால் ப்ரித்வி கொந்தளித்து பேசிய போது அவருக்கு ஆதரவாக ஜேசனும் வந்தார்.
தற்போது முனியம்மா, வாசன், ஷாந்திகா என மூன்று பேர் மட்டும் இந்த விளையாட்டில் உள்ளனர். ஆனால் இதில் முனியம்மா இறுதியில் வாசனையே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது போன்ற காட்சியும் வெளியாகியு்ளளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |