காலணியுடன் கோவிலுக்கு சென்றது ஏன்? வருத்ததுடன் விக்னேஷ் சிவன் அளித்த பதில்!
நடிகை நயன் மற்றும் இயக்குனர் விக்கி திருமணம் முடிந்த பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதியில் காலணியுடன் சென்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் பெரிய அளவில் வெடிக்க, இதுக்குறித்து விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது சாத்தியமில்லாததால் சென்னையில் எங்கள் திருமணத்தை நடத்த வேண்டியிருந்தது.
எங்கள் திருமணத்தை முடித்த கையோடு வீட்டிற்கு செல்லாமல் சாமி கல்யாணத்தை பார்க்கவும், நாங்கள் மிகுந்த பக்தி கொண்ட பாலாஜியின் ஆசிர்வாதத்தைப் பெறவும் நேரடியாக திருப்பதிக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அற்புதமான தரிசனம் செய்தோம்.
இந்த நாள் எங்கள் நியாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு வெளியே ஒரு புகைப்படம் எடுத்து அதை எங்கள் விருப்பப்படி இங்கே திருமணம் முடிந்துவிட்டது என்று உணர்வை பெற விரும்பினோம். ஆனால், கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக நாங்கள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
அதன் பின்னர் சலசலப்பு குறைந்த நேரத்தில் உள்ளே நுழைந்து விரைந்து படம் எடுக்கும் அவசரத்தில், நாங்கள் எங்கள் காலணிகளை அணிந்திருந்ததை உணரவில்லை. மேலும், நாங்கள் தொடர்ந்து கோவில்களுக்குச் செல்லும் தம்பதிகள், கடவுள் மீது அபரிமித நம்பிக்கை கொண்டவர்கள்.
கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருமலைக்குச் சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்தோம். எங்களால் புண்படுத்தப்பட்டவர்களிடம் நாங்கள் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் இல்லை. எங்கள் சிறப்பு நாளுக்காக அனைவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
மேலும் உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான நேர்மறையை மட்டுமே நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.