மூட்டுவலிக்கு தீர்வாகும் முடவாட்டுக்கால்: சைவ ஆட்டுக்கால் சூப் எப்படி செய்வது?
ஆட்டுக்காலைப் போன்று சத்துக்களை அள்ளித்தரும் முடவாட்டுக்கால் கிழங்கின் பயன்கள் மற்றும் இதன் சூப் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
முடவாட்டுக்கால்
முடவாட்டுக்கால் கிழங்கினை சைவ ஆட்டுக்கால் என்று கூறுவதுண்டு, ஆட்டு கால்களைப் போன்று ரோமங்கள் நிறைந்து காணப்படும் இந்த கிழங்கானது முடவனைக் கூட சரிசெய்யும் என்று கூறுவதுண்டு.
பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போன்று காணப்படும் இந்த கிழங்கினை தோல் சீவி பார்த்தால் உள்ளே இஞ்சி போன்று வெள்ளையான கிழங்கு கிடைக்கும்.
முடவாட்டுக்கால் உடலில் உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது. கிட்டதட்ட 4000 நோய்களைத் தீர்க்கும் என்று சொல்கிறார்கள்.
இவ்வளவு மருத்துவ குணம் கொண்டு இந்த கிழங்கானது மலை பிரதேசங்களில் விளையுமாம். அதாவது கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதியில் பாறைகளின் இடுக்குகளில் தான் இந்த கிழங்கு வளருமாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொல்லி மலை மற்றும் ஏற்காடு போன்ற இடங்களில் இந்த கிழங்கு அதிகள அளவில் கிடைக்கின்றது.
முடவாட்டுக்கால் பயன்கள்
எலும்பு பிரச்சனை
வயதான காலத்தில் தடி ஊன்றி நடக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு எலும்புகளின் பலத்தை அதிகரிக்கின்றது. எலும்பு மூட்டுகளுக்கு இடையேயுள்ள மஜ்ஜையை நன்று உறுதியாக வளர்க்கவும் பயன்படுகின்றது.
எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள், மூட்டுவலி இவற்றிற்கு சிறந்த நிவாரணியாக இந்த கிழங்கு இருக்கின்றது. மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இதனை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
ஆர்தரைட்டிஸ் போன்ற இன்ஃப்ளமேஷன்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வது முடவாட்டுக்கால் கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் போக்கிவிடுவதுடன், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
மூட்டுவலி பிரச்சனை
மூட்டுவலியை தவிர, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இந்த சூப் நல்லது. 15 நாட்களுக்கு இந்த சூப் குடித்துவரும்போது நல்ல பலன் கிடைக்குமாம். ஆனால், இந்த சூப்பை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தான் குடிக்க வேண்டுமாம்.
முக்கியமாக, சர்க்கரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம் கட்டுக்குள் இருக்கும்.
இந்த கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் உள்ளன. கருப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் இருக்கின்றது.
எப்படி செயல்படும் தெரியுமா?
அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டு இந்த கிழங்கினை நீங்கள் உட்கொண்டால் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்றால், அதாவது மருத்துவமனையிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் எப்படி உடடியாக செயல்படுமோ, அது போன்று இந்த முடவாட்டுக்கால் செயல்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
முடவாட்டுக்கால் கிழங்கு மேல் புறத்தில் ஆட்டின் மயிர் கால்களை போல நார்களாக இருக்கும். அதன் தோலை சீவி எடுத்தால் உள்ளே இஞ்சி போன்று இருக்கும். இதை அப்படியே சமைத்து சாப்பிட முடியாது.
இந்த கிழங்கை ஆட்டுக்காலை சூப் வைப்பது போன்று வைத்து சாப்பிடலாம். சில குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே இந்த கிழங்கு கிடைக்கும் என்பதால் மற்ற சமயங்களில் அதன் தோல் சுருங்கி உள்ளிருக்கும் கிழங்கும் சுருங்கிவிடும்.
அதில் உள்ள நீர்ச்சத்து போய்விடும் என்பதால் இதை பதப்படுத்துவதற்கு மணல்களில் புதைத்து வைப்பார்கள். இப்போது அதன் தோலை சீவி விட்டு காய வைத்து பொடி செய்து வருட கணக்கு பதப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சூப் செய்யும் முறை
தேவையான பொருள்கள்
முடவாட்டுக்கால் கிழங்கு - சிறு துண்டு (50-100 கிராம்)
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பற்கள்
கருவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - ஒன்று
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
பெருங்காயம் - சிறிது
செய்முறை
முடவாட்டுக் கால் கிழங்கை முதலில் தோல் சீவி இஞ்சியைப் போன்று சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு சேர்த்து பெரிய விட்ட பின்பு, அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் கிழங்கையும் சேர்க்கவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு, இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் தூள் இவற்றினை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்து வந்ததும் உப்பு சேர்க்க வேண்டும். சூப்பிற்கு எப்போதும் கடைசியில் தான் உப்பு சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால் அதிகமாகிவிடும்.
சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் ஆட்டுக்கால் சூப் இன் சுவையில் அருமையான சைவ ஆட்டுக்கால் சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |