குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட காரணம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் முக்கிய கிரகங்கள் இணைவதால் ஏற்படும் ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேடியாக தாக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ராஜ குருவாக அறியப்படும் குருபகவான் எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவாற்றலின் கிரகமாகவும், கிரகங்களின் இளவரசனாகவும் கருதப்படும் புதன் பகவானுடன் இணைவதால், நவபஞ்சம ராஜயோகம் உருவாகின்றது.

இந்த அரிய ராஜயோகமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்திளாலும், ஏப்ரல் முதல் வாரத்திலேயே அதிர்ஷ்டத்தின் உச்சத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

குருபார்த்தால் கோடி நன்மை என குறிப்பிடுவது போல், குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ரிஷப ராசியினரின் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்கள் கிடைக்கும்.
குறிப்பாக தொழில் நிலையில் அமோகமான முன்னேற்றம் இருக்கும். குருவின் ஆசியால் பெரியளவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான யோகம் கூடிவரும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
ஏப்ரல் முதல் வாரத்திலேயே எதிர்ப்பாராத வகையில் பணவரவு அதிகரிக்கும். வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைமேல் வரும்.
கடகம்

குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசியினர் வாழ்வில் நிதி நிலையில் இதுவரையில், இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது. குருவின் ஆசியால் பொன், பொருள் சேரும்.
மனநிலையில், தெளிவு பிறக்கும். சரியான திட்டமிட்டு ஒரு காரியத்தில் இறங்குவதால் எளிதில் வெற்றி கிட்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும். குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் இதுவரையில் இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
பொருளாதார ரீதியில் அமோகமான முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
பல வழிகளிலும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் கூடி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |