மீனுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க.... செரிமானன பிரச்சனை ஏற்படுமாம்
புரதச்சத்து நிறைந்த மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம்.
மீன்
கடல்வகை உணவுகளில் மிகவும் முக்கியமான உணவாக இருப்பது மீன் ஆகும். அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் மீன் முதல் இடத்தில் இருக்கின்றது.
அதிக புரதச்சத்து மற்றும் ஒமேகா 3 அமிலத்தையும் கொண்டுள்ளது. மிகவும் விரைவில் சமைக்கும் உணவாகவும் மீன் இருக்கின்றது.
ஆனால் மீனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பால்
பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், தயிர் இவற்றினை மீனுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்புசம், வாந்தி மற்றும் வயிற்றுவலி பிரச்சனைகள் ஏற்படும்.
ஏனெனில் இவை இரண்டிலும் வெவ்வோறான புரத வகைகள் இருப்பதால், இவை இவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. செரிமானமும் மிகவும் மெதுவாகவே நடக்கும்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை மீனுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதிலுள்ள அமிலம் மீனிலுள்ள புரதச்சத்தை சரியாக உறிஞ்சப்படாமல் தடுக்குமாம்.
இதனால் குடுல் அசௌகரியம், தீவிர வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அமில பிரச்சனையும் ஏற்படும்.

பானங்கள்
அமிலம் அதிகமான பானங்கள், கார்பனேட்டட் சோடா, ஜுஸ் போன்ற பானங்களை மீனுடன் சேர்த்து பருகக்கூடாது. இவை இயற்கையாக நடக்கும் செரிமான செயல்முறையை பாதிப்பதுடன், வயிறு அசௌகரியம், உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படுகின்றது.

பயறு மற்றும் பருப்பு வகைகள்
பருப்பு, பீன், மஷ்ரூம் போன்ற உணவை மீனுடன் சேர்க்கக்கூடாது. இவை இரண்டிலும் புரதம அதிகமாக இருப்பதால் செரிமானம் தாமதமாகும். மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனையும் ஏற்படும். இதே போன்று மாவுச்சத்து உணவுகளான பாஸ்தா, உருளைக்கிழங்கையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |