வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடாதீங்க! பாரிய பிரச்சனை ஏற்படுமாம்
ஆரோக்கியத்தினை அள்ளித்தருணம் பழங்களில் சிலவற்றை காலை வெறும்வயிற்றில் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே பழங்கள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதுடன், உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது. உடம்பிற்கு உடனடி ஆற்றலையும், புத்துணர்ச்சியும் கொடுக்கின்றது. ஆனால் இவை சில நேரங்களில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அந்த வகையில் காலை வெறும்வயிற்றில் சாப்பிடக்கூடாத பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாப்பிடக்கூடாத பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் இவற்றினை வெறும்வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை நெஞ்செரிச்சல் ஏற்படுத்துவதுடன், இரைப்பை அமில உற்பத்தியை அதிகரித்து அழற்சிக்கு வழிவகுக்கும்.
தக்காளி உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் நிலையில், இதில் அதிகளவு டானிக் அமில் இருப்பதால், இவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிப்பதுடன், எரிச்சல் மற்றும் அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களும், மெக்னீசியமும் நிறைந்துள்ளது. வெறும்வயிற்றில் இவற்றினை எடுத்துக்கொண்டால் மெக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சமநிலையை சீர்குலைத்து இதய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
அன்னாசி பழத்தில் அதிகளவு புரோமிலைன் உள்ள நிலையில், இதுவும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். ஆதலால் வெறும் வயிற்றில் உட்கொள்வதை தவிர்க்கவும்.
இதே போன்று நார்ச்சத்து அதிகம் கொண்ட பேரிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை மென்மையான சளி சவ்வுகளை சேதப்படுத்தி அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் கொண்ட கொய்யா பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான அமைப்பை சேதப்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட தர்பூசணி பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதிக நீர் உள்ளடக்கமானது வயிற்றில் அமிலத்தன்மையின் அளவை அதிகரிப்பதுடன், எரிச்சலையும் ஏற்படுத்தும்.
லிச்சி, மாம்பழம் போன்ற பழங்களில் சர்க்கரை உள்ளடக்கம் மிக அதிகமாக உள்ளதால் வெறும்வயிற்றில் சாப்பிடும் போது, இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் அமில உள்ளடக்கம் நிறைந்திருப்பதால், வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது வயிற்றில் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |