நீரிழிவு நோயாளிகளே! சாப்பிட முன் இதை ஒரு ஸ்பூன் குடிங்க - ரத்த சக்கரை கட்டுப்படும்
நீரிழிவு நோயாளிகள் உணவிற்கு முன் இந்த ஒரு நாற்றை ஒரு ஸ்பூன் குடித்தால் ரத்த சக்கரை கட்டுக்குள் இருக்கும். இது ஆயுள்வேதத்தில் கூறப்பட்டது.

ரத்த சக்கரை
இந்தியாவில் நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருகின்றது. இதற்கு காரணம் மோசமான வாழ்க்கை முறை ஆகும்.
இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் சில வீட்டு வைத்தியங்கள் நீரிழிவு நோயாளிகள் கடைபிடிப்பது அவசியம்.

சில சக்கரை நோயாளிகள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் அவர்களுக்கு ரத்த சக்கரை சாப்பிட்ட பின் அதிகக்க நேரிடும். இதனால் இரத்த சக்கரை அளவு கட்டுக்குள் இருக்காது.
இதற்கு தான் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன்னர் அப்பிள் சைடர் வினிகரை சாப்பிட முன் ஒரு ஸ்பூன் குடிக்க ஆயுள்வேதத்தால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இதை உணவுக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்ள வேண்டும். இதை விரிவாக பார்க்கலாம்.

என்ன குடிக்க வேண்டும்
இன்ஸ்டாகிராமில், டாக்டர் ஜைதி, ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது இது வயிற்றில் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது என்றும் விளக்கினார்.
இதன் காரணத்தால் உணவில் இருந்து உருவாகும் குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் மெதுவாகச் சென்றடையும். இது இரத்தச் சர்க்கரைன் அளவை கட்டுப்படுத்த உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகரை சாப்பிட முன் குடிப்பது நமது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதில் மிக முக்கியமாக உங்கள் உணவில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும்போது, நீங்கள் ஆப்பிள் சைடர் வினிகர் குடிக்க வேண்டும்.

ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி குடிப்பது?
இதற்கு, 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை 1 குவளை தண்ணீரில் கரைக்கவும். சாப்பிடுவதற்கு முன்னர் அரை மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
ஒருவேளை இதை தண்ணீருடன் உங்களுக்கு குடிக்க விருப்பமில்லை என்றால் சாப்பிடுவதற்கு முன்பு சாலடில் ஊற்றி சாப்பிட வேண்டும்.
இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்குப் மிகவும் பயனளிக்கும். இதில் முக்கியமாக மருத்துவரின் ஆலோசனை பெற்றவுடன் நீங்கள் குடிப்பது மிகுந்த நன்மை தரும்.

கவனிக்க வேண்டிய விடயங்கள்
- ஆப்பிள் சைடர் வினிகரை எப்போதும் தண்ணீருடன் கலந்துதான் அருந்த வேண்டும். ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீர் இல்லாமல் அப்படியே குடிக்க கூடாது.
- நீங்கள் இதை சாலட்களிலும் சேர்த்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் உணவுக்கு முன், வெள்ளரிக்காய், கேரட் மற்றும் தக்காளி போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
- இது நார்ச்சத்தை வழங்குவதோடு, அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளைத் தடுக்கவும் உதவும்.
- மேலும் இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் பசியைக் குறைக்கவும் உதவுகிறது.
- நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு சிறிது தூரம் நடப்பது இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |