டாய்லெட்டில் போன் பாவிப்பரா நீங்கள்? உங்களுக்கு இந்நோய்கள் வருமாம்: கொஞ்சம் உசாரா இருங்க!
பொதுவாகவே பலருக்கு பல விதமான சிந்தனைகளும் யோசனைகளும் தோன்றுவது டாய்லெட்டில் தான்.
அதிலும் சிலர் டாய்லெட்டுக்குப் போகும் போது நியூஸ் பேப்பர் கொண்டு போவார்கள் ஒரு சிலர் செல்போன் எடுத்துக் கொண்டு போவார்கள் அப்படி டாய்லெட்டுக்கு செல்போன் கொண்டுப்போனால் பல நோய்களை சந்திக்க நேரிடும்.
டாய்லெட்டில் போன்
டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் கிண்டுவதால் நம் கைகளில் படியும் கிருமிகளை கண்டுக் கொள்ளாமல் கையை வாய், கண், மூக்குகளில் வைப்பதால் அந்தக் கிருமிகள் நம் உடலுக்குள் செல்கின்றது.
ஆய்வின்படி டாய்லெட்டில் இருக்கும் கிருமிகள் நமது மொபைல் போன் திரையில் மட்டும் 28 நாட்கள் வரை உயிரோடு இருக்குமாம். டாய்லெட் இருக்கையில் இருக்கும் கிருமிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் ஆகும்.
மேலும், டாய்லெட் இருக்கையில் ஈ.கோலி, என்டோரோகோகஸ், சால்மோனெல்லா, ஷிகெல்லா, கேம்பிலோபாக்டர் ஆகிய பாதிப்பு உண்டாக்கும் நோய்க்கிருமிகள் உள்ளன.
இவற்றால் உங்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, மற்ற தொற்று நோய்கள், உணவு ஒவ்வாமை போன்ற நோய்கள், புண்கள் மாதிரியான தோல், சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.
அதுமட்டுமில்லாமல் டாய்லெட்டில் ரொம்ப நேரம் உட்கார்ந்தே இருந்தால் மலக்குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும் இது தான் மூல நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும், டாய்லெட்டில் அமர்ந்துக் கொண்டே இருந்தால் ஆசனவாயைச் சுற்றி இருக்கும் நரம்புகள் அழுத்தத்தின் கீழ் நீண்டு, வீக்கம் ஏற்படலாம்.
டாய்லெட்டில்க்கு நீங்கள் மொபைல் போன் கொண்டு செல்வதால் இத்தனை தீமைகள் என்று பார்த்தீர்களா? ஆதலால் இவ்வாறு டாய்லெட்டிக்கு மொபைல் கொண்டு செல்வதை தவிர்ப்பது நல்லது.