அசுர வேகத்தில் மனிதர்களை போல் நியூஸ் பேப்பர் படிக்கும் குரங்கு! வியக்க வைத்த காட்சி
தன்னுடைய உரிமையாளருடன் இணைந்து செய்தித்தாள் புரட்டி பார்க்கும் குரங்கின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேடிக்கை வீடியோக்கள்
தற்போது இணைய பக்கம் சென்றாலே விலங்குகளின் சேட்டை வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும். அந்தளவு விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
நாம் அதிக மன உளைச்சலில் இருக்கும் போது இது போன்று வீடியோக்கள் பார்த்தால் மன அமைதியாக இருக்கும் என்பதால் பலரும் இந்த வீடியோக்களை அலுவலகம், வீடு என பல இடங்களில் பார்க்கிறார்கள்.
விலங்குகளின் கேளிக்கை வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
நியூஸ் பேப்பர் படிக்கும் குரங்கு
இதன்படி,குரங்கு ஒன்று தனது உரிமையாளருடன் அமர்ந்து செய்தித்தாள் படிக்கிறது. செய்தித்தாளை புரட்டிப் புரட்டி குரங்கு படிக்கும் அழகு பார்ப்பதற்கு மிக நன்றாக இருக்கிறது.
அதில் உள்ள செய்திகளை அது டிக் செய்வது போல் குத்திக் குத்தி நோட் செய்கிறது.
இது காண்பதற்கு வெகு வேடிக்கையாக உள்ளது. மனிதர்கள் செய்யும் பெரும்பாலான செயல்களை குரங்குகளால் செய்ய முடியும். அதற்கு இந்த வீடியோவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ குரங்கிற்கு செய்தித்தாள் படிக்கும் அளவிற்கு அறிவு இருக்கிறதா? என கமண்ட் செய்து வருகிறார்கள்.